எரேமியா 17
1 யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது. 2 உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்கள் அருகில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது. 3 வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் சொத்துக்களையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன். 4 அப்படியே நான் உனக்குக் கொடுத்த நிலத்தை நீ தானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் எதிரிகளுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் நெருப்பை மூட்டிவிட்டீர்களே. 5 மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார். 6 அவன் அந்தரவெளியில் உலர்ந்துபோன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்திரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். 7 யெகோவாமேல் நம்பிக்கைவைத்து, யெகோவாவை தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனிதன் பாக்கியவான். 8 அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். 9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? 10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். 11 அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அடைகாத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவில் மூடனாயிருப்பான். 12 எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது. 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும். 14 யெகோவாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னைக் காப்பாற்றும், அப்பொழுது காப்பாற்றப்படுவேன்; தேவரீரே என் துதி. 15 இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள். 16 நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது. 17 நீர் எனக்குப் பயங்கரமானவராக இருக்காதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம். 18 நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரச்செய்து, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.