மீகா 6
1 யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும். 2 மலைகளே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, யெகோவாவுடைய வழக்கைக் கேளுங்கள்; யெகோவாவுக்கு அவருடைய மக்களோடு வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலர்களோடு அவர் வழக்காடுவார். 3 என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல். 4 நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்து, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். 5 என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். 6 என்னத்தைக்கொண்டு நான் யெகோவாவுடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ? 7 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாக ஓடுகிற பத்தாயிரங்களான ஆறுகளின்பேரிலும், யெகோவா பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்குவதற்காக என் முதற் பிறந்தவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? 8 மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.